திருக்குறள்


வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும்
நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை

குண்டுபில்லார் திருக்கோவில்

ஸ்தலம் அமைவிடம்

ஜங்கமநாயக்கன்பாளையம், பதுவம்பள்ளி.

மின்னஞ்சல்

srilingammaltemple@gmail.com

வலைத்தளம்

gundupillarkulam.com

அன்புமிக்க குண்டுபில்லார் குலத்தார் அனைவர்க்கும் வணக்கம்

              நமது திருக்கோயில் மேலும் சிறப்பு பெற்று தல்லி ஸ்ரீ லிங்கம்மாள் அருள் நமது குலத்தார் அனைவர்க்கும் சென்றடைய கோவிலுக்கென்று பிரத்தியேகமாக இணையதளம் ஒன்றை உருவாக்கி உள்ளோம். உங்களுடைய ஆதரவோடும் ஒத்துழைப்போடும் மிகச் சிறப்பாக இந்த இணையத்தளம் அமைந்து இருக்கிறது என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். இதன் முக்கிய நோக்கம் நமது குலத்தார் அனைவரையும் ஒருங்கிணைத்து குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்யவேண்டும் என்பதே. மேலும் நம் குலதெய்வ வழிபாட்டின் சிறப்பை, முக்கியத்துவைத்தை பாரம்பரியத்தை நம் பின்வரும் சந்ததிகளும் பின்பற்ற வேண்டும் என்பதே இதன் குறிக்கோள்.

அன்னை ஸ்ரீ லிங்கம்மாள் வேணுகோபால் சுவாமி அருள் கிடைக்கப் பெறவே நாங்கள் இப்பிறவியில் குண்டுப்பில்லார் குலத்தில் பிறந்தோமே ..!

அறம் பொருள் இன்பம் அனைத்தும் தருவாய் துன்பங்கள் நீங்கி சுகங்களை தருவாய் உன் ஆசி கிடைக்கப்
பெற்றாலே …!

ஆயிரம் பிறவிகள் இருந்தாலும் அரிதான பிறவி மானிடப் பிறவி !

நின் இன்முகம் கண்டு சேவை புரிய மற்றும் ஒரு பிறவி மானிடப் பிறவியாய் …!

குண்டுப்பில்லார் குலத்திலேயே பிறக்க கருணை புரிவாய் என்று வேண்டி நின் பாத கமலம் தொட்டு வணங்கி நிற்கிறோம்.



இப்படிக்கு

குலதெய்வம் லிங்கம்மாள் கோவில்
குண்டுபில்லார் பரிபாலன சங்கம்
கோயமுத்தூர்

சிறப்பு மற்றும் விசேஷ பூஜைகள் விபரம்

  மாதாந்திர பௌர்ணமி பூஜைகள் விபரம்

12.05.2025   திரு D. செல்வராஜன் - சாந்தி செல்வராஜன் குடும்பத்தார்- ஹிந்துஸ்தான் - பாரதி பார்க் ரோடு -                      சாய்பாபா காலனி . 

10.06.2025   திருமதி. ராஜேஸ்வரி தேவராஜ் குடும்பத்தார்-காட்டூர் 
                  

10.07.2025   திரு. D. பால சந்தர் - பிரியா  , D. பிரபாகர் - மேனகா குடும்பத்தார், ராம்நகர் ,கோவை 
                       திருமதி. கனகம் கோவிந்தராஜுலு குடும்பத்தார்- பாப்ப நாயக்கன்பாளயம். 

08.08.2025   திரு. G.R. கோவிந்தராஜன் - விஜயலக்ஷ்மி குடும்பத்தார்- பாப்ப நாயக்கன்பாளயம் 
                    

07.09.2025   திரு.N. மனோகரன் - பரிமளா செல்வி குடும்பத்தார்- NGGO காலனி , கோவை  
                       திரு N. வேணுகோபால் - வசந்தாமணி வேணுகோபால் குடும்பத்தார்- GD காலனி,                   ஆவாரம்பாளயம். 

06.10.2025   திரு. துரை சாமி நாயுடு  - சரோஜினி  ,  திரு. ரகு  - ராஜலக்ஷ்மி குடும்பத்தார்- அண்ணா நகர்  - பீளமேடு.

05.11.2025   திரு. D.நடராஜன் - வனிதா நடராஜன்- ஹிந்துஸ்தான் குடும்பத்தார்- டாடா பாட் , கோவை 

04.12.2025   பொது பூஜை , தீபம் திருநாள்  

02.01.2026    திரு. D.சௌந்தரராஜன்  - சுமதி  - ஹிந்துஸ்தான் குடும்பத்தார்- பாரதி பார்க் ரோடு -                      சாய்பாபா காலனி . 

01.02.2026   திரு E.S. ஆனந்த் - மைதிலி குடும்பத்தார்-காளபட்டி - கோவை 
                      திரு E. ரவி சங்கர் - அனிதா குடும்பத்தார்-காளபட்டி - கோவை 

02.03.2026   திரு R. மனோகரன் - பிரேமா மனோகரன் குடும்பத்தார்-மனோகரா பிரிண்டர்ஸ் - பாப்ப நாயக்கன்பாளயம். 
                      திரு G. தாமோதரன் - ரேணுகா தேவி குடும்பத்தார்- ராம்நகர் ,கோவை 

01.04.2026   திரு G J ராதாகிருஷ்ணன்- யசோதா குடும்பத்தார்-ஆவராம் பாளயம்
                     திரு. R. விஜய ராகவன் - ரேணுகா தேவி குடும்பத்தார்- G.V. ரெஸிடென்சி , கோவை 


                    

  சத்ய நாராயண பூஜை

சத்ய நாராயண பூஜை ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் மாலை 4.30 மணிக்கு நடைபெறும். 

தினசரி பூஜைகள்

  காலை மணி 7.00 - 7.30 - தீபாராதனை, பால் மற்றும் அமுது படைப்பு, (திருமஞ்சனம் - வெள்ளி மற்றும் பௌர்ணமி அன்று )

  மதியம் மணி 11.00 - 11.30 -உச்சிகால பூஜை

  நடை திறப்பு மாலை மணி 05.00

  நடை சாத்துதல் இரவு மணி 07.30

Photo Gallery

  • You are Visitor Number : website counter